feddral bank
BREAKING NEWS

ரஜினியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி , நாளை ரஜினி இருப்பாரா?

பதிவு செய்த நாள்: 03 Jun 2018 12:14 pm

சுப்ரமணியசாமி, ரஜினி

மதுரை : பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, தமிழக அரசியல் நிலை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முழுமையான அறிக்கை கிடைக்காததாலேயே பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்கள் பாமர மக்களா, பயங்கரவாதிகளா என்ற விவரம் தெரியவேண்டும்.

நடிகர்களை நம்ப முடியாது. ரஜினி நடிகராக இன்று இருக்கிறார். நாளை இருப்பாரா என அவருக்கே தெரியாது. வீரர் போல் பேசியவர்கள் காணாமல் போய்விட்டார்கள். மத்திய அரசுக்கு எதிராக சில தனிக்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காஷ்மீரில் தற்போது நடைபெற்று வருவது தூத்துக்குடி சம்பவத்தை விட 100 மடங்கு பெரியது. சிஆர்பிஎஃப் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*