feddral bank
BREAKING NEWS

கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் .

பதிவு செய்த நாள்: 03 Jun 2018 11:59 am

டெல்லி:

Image result for modi wishing

திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் கட்சித் தொண்டர்களால் தமிழகம் முழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் வேறுபாடின்றி பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிவருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஒதுங்கி உடலுக்கு ஓய்வு கொடுத்திரந்தாலும், அரசியல் சிந்தனைகளுக்கும், மனதிற்கும் ஓய்வு கொடுக்காமல் இருந்து வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து கூறி ஆசி பெற்றார் ஸ்டாலின். மேலும் கருணாநிதியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி தயாநிதி மாறன் ஆசி பெற்றுள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருணாநிதி இன்னும் நூறாண்டு காலம் வாழவேண்டும் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*