feddral bank
BREAKING NEWS

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒளிரும் நட்சத்திரம்: யார் இந்த ஸ்மிரிதி மந்தனா?

பதிவு செய்த நாள்: 30 Jun 2017 9:16 pm
By :

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒளிரும் நட்சத்திரமாக பரிமாணித்துள்ள இளம் கிரிக்கெட் வீராங்கணை ஸ்மிரிதி மந்தனவுக்கு இந்திய வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மகளிர் உலகப் கோப்பையின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஸ்மிரிதிக்கு இந்திய கிரிக்கெட்வீரர்கள் ஷேவாக், கைஃப், சச்சின், இஷான் சர்மா உள்ளிட்டடோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து உடனான முதல் லீக் போட்டியில் 72 பந்துகளில் 90 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் ஸ்மிரிதி.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் சதம் விளாசி இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறார் ஸ்மிருதி.

ஸ்மிரிதியின் இந்தச் சிறப்பான ஆட்டங்களுக்கு அவருக்கு தொடர்சியான ஆட்ட நாயகி விருது வழங்க்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஸ்மிருதி மந்தனா?

மும்பையைச் சேர்ந்த 20 வயதான ஸ்மிருதி மந்தனா தன்னுடைய 16-வது வயதில் 2013-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு ஏதிராக தனது முதல் ஒரு நாள் போட்டியை சந்தித்திருக்கிறார்.

இதுவரை 25 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 897 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரு சதங்களும், ஆறு அரை சதங்களும் அடங்கும்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*