[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழ்நாடு மணல் இணைய சேவை: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள்: 28 Jun 2017 11:29 am
By :

தமிழ்நாடு மணல் இணைய சேவை இணையதளத்தையும், செல்லிடப்பேசி செயலியையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாக ‘தமிழ்நாடு மணல் இணைய சேவை’ (www.tnsand.in) இணையதளத்தையும், (tnsand)செல்லிடப்பேசி செயலியையும் தொடங்கி வைத்தார்.

உபயோகிப்பாளர்களுக்கு மணல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைத்திட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றாக, தற்போது இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் வாயிலாக, பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக்கொள்ளலாம்.

மணல் பெற்றுக் கொள்வதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுப்பணித்துறையின் வாயிலாக 28.6.2017 முதல் 30.6.2017 வரை பயிற்சியளிக்கப்படும்.

இதற்கென தனியாக ஓர் உபயோகிப்பாளர் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு மணல் இணைய சேவை 1.7.2017 முதல் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், 1.7.2017 முதல் பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணைய சேவை மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும். இதனால், உபயோகிப்பாளர்களின் மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், மணல் தங்கு தடையின்றி குறைவான விலையில் கிடைக்கவும் வழிவகை ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds