feddral bank
BREAKING NEWS

தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா பிராந்திய நிர்வாக ஒப்பந்த நகல்களை எரித்து ஜிஜேஎம் போராட்டம்

பதிவு செய்த நாள்: 28 Jun 2017 11:45 am
By :

கூர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர், கூர்க்கா பிராந்திய நிர்வாக (ஜிடிஏ) ஒப்பந்தத்தின் நகல்களை எரித்து நேற்று தங்களது எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.

மேற்கு வங்க மாநிலத்தின் ஒருபகுதியான டார்ஜிலிங் உள் ளிட்ட மலைப்பகுதிகளை ஒருங் கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பு கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா சேவையும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு டார்ஜிலிங், குல்ஷியாங், மிரிக் மற்றும் சிலிகுரியில் சில பகுதிகள், காலிம்பாங் மாவட்டத் தின் அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து அவற்றை நிர்வகிக்க கூர்க்கா பிராந்திய நிர்வாக (ஜிடிஏ) அமைப்பு ஏற் படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத் தில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பு ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.

இந்த அமைப்பில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 45 உறுப் பினர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது நடைபெற்றுவரும் போராட்டத்தின் ஒருபகுதியாக இந்த 45 பேரும் தங்களது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தனர். மேலும் நேற்று சவுக்பஜார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஜிடிஏ ஒப்பந்த நகலை எரித்து ஜிஜேஎம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி ஜிஜேஎம் தலை வர் கூறுகையில், ‘எங்களுக்கு ஜிடிஏ தேவையில்லை. கூர்க் காலாந்து தனி மாநிலம் தான் வேண்டும். இதனை வலியுறுத்தி எங்களது போராட்டம் தொடரும். ஜிடிஏ-வுக்கான தேர்தலில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். கூர்க்கா பிராந்திய நிர்வாக ஒப்பந்தத்தை எரித்ததன் மூலம் மேற்கு வங்க மாநில அரசுடனான எங்களது உறவு முடிந்துவிட்டது’ என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*