[email protected]
feddral bank
BREAKING NEWS

ஃபெட்னா 2017: அமெரிக்க பறை இசைக் குழுக்கள் கலக்கப் போகும் தமிழ்ப் பேரவை விழா

பதிவு செய்த நாள்: 27 Jun 2017 8:30 pm
By :

மினசோட்டா:

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக தமிழ் விழாவில், 133 அதிகார பறை இசை முழக்கம் நிகழ்வு அரங்கேறவுள்ளது. உலகத்தமிழ் நெஞ்சங்களை பறை அதிர்வுகள் துள்ள வைக்கப் போகிறது.

வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஆண்டின் தமிழ்ப்பேரவை விழா, மினியாபொலிஸ் கன்வென்சன் சென்டரில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.

இதில் பல்வேறு தமிழ்க் கலை இலக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளன. தமிழகம் மற்றும் உலக அளவிலான தமிழ்த் திரைப்பட கலைஞர்கள், படைப்பாளிகள், அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்ப் பேரவை விழாவில், அமெரிக்காவிலுள்ள பறை இசைக் குழுக்கள் இணைந்து 133 அதிகாரப் பறை முழக்க நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன.

இதே விழாவில் பல்வேறு தமிழர் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக பறை இசைக் குழுக்கள் உள்ள நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds