feddral bank
BREAKING NEWS

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘பார்ட்டி’

பதிவு செய்த நாள்: 24 Jun 2017 12:52 pm
By :

‘சென்னை 28’ 2-ம் பாகத்தைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘பார்ட்டி’ என பெயரிட்டுள்ளார்கள்.

பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, வெங்கட்பிரபு இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘சென்னை 28-2’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் முன்வந்தது. இதற்காக கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் வெங்கட்பிரபு.

இந்நிலையில், நேற்று (ஜூன் 23) அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டது.

‘பார்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

வழக்கமாக வெங்கட்பிரபு படம் என்றாலே, யுவன் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால், இப்படத்தில் பிரேம்ஜி இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு ப்ரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை கவனிக்கவுள்ளார்.

‘பார்ட்டி’ படத்தின் மோஷன் போஸ்டர்

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds