[email protected]
feddral bank
BREAKING NEWS

பெங்களூரு மெட்ரோ ரயிலில் இந்தி திணிப்பு: மத்திய அரசை கண்டித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!!

பதிவு செய்த நாள்: 24 Jun 2017 6:04 pm
By :

பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 17-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையில் இந்தி திணிக்கப்படுவ தாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதே போல கன்னட வளர்ச்சி கழகம், கன்னட‌ எழுத்தாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப் பினரும் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்தனர்.

கன்னட வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பெங்களூருவில் கன்னடம், தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளைப் பேசுவோர் பெரும் பான்மையாக வசிக்கிறார்கள். இந்தி மொழி எழுதி, படிப்போரின் சதவீதம் மிகவும் குறைவு. மெட்ரோ ரயிலில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இந்தி தெரியாத‌ பயணிகளைக் கடுமையாக பாதிக்கிறது.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் (நம்ம மெட்ரோ) உள்ளூர் மொழிக்கும், ஆங்கில மொழிக் கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தி திணிக்கப் படுவதை ஏற்க முடியாது’’ என குறிப்பிட்டுள்ளது.

மேலும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் சார்பாக நேற்று பெங்களூரு மெட்ரோ அலுவலகத்துக்கு எதிரே இந்தி திணிப்புக்கு எதிராக‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாராயண கவுடா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது இந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

சித்தராமையா ஆலோசனை

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களைச் சந்தித்த ராமலிங்க ரெட்டி இப்பிரச்சினை தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds