feddral bank
BREAKING NEWS

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓபிஎஸ் அணி ஆதரவு

பதிவு செய்த நாள்: 22 Jun 2017 12:45 pm
By :

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ராம்நாத் கோவிந்த் ஒரு சிறந்த நிர்வாகி என்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தலித் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்”

ஆட்சிக்குப் பாதகம் வந்தால், ஆட்சியை வீசி எறிந்து கட்சியை வளர்த்தெடுப்போம் என்று அதிமுக எம்.பி. அன்வர் ராஜா கூறியது குறித்த நிருபர்கள் கேள்விக்கு அது அவரது தனிப்பட்ட கருத்து என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds