feddral bank
BREAKING NEWS

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா- ஆடவர் பிரிவில் ஜெயராம், காஷ்யப் தோல்வி

பதிவு செய்த நாள்: 22 Jun 2017 12:51 pm
By :

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி காந்த், சாய் பிரணீத் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் பிரணாய், காஷ்யப், அஜெய் ஜெயராம் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று தொடங்கிய இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்ற இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-13, 21-16 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் கன் சாவ் யூவை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் சாய் பிரணீத் 10-21, 21-12, 21-10 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் டாமி சுகிர்தோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காந்த் தனது அடுத்த சுற்றில் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாடுகிறார்.

சாய் பிரணீத் தனது 2-வது சுற்றில் சீனாவின் ஹுவாங்குடன் மோதுகிறார். இவர்கள் இருவரும் முன்னேற்றம் கண்ட நிலையில் மற்ற இந்திய வீரர்களான பிரணாய், அஜெய் ஜெயராம், காஷ்யப் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர்.

ஜெயராம் 14-21, 21-10, 21-9 என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீரரான ஹாங் காங்கின் லாங் அங்குஸூடமும், காஷ்யப் 18-21, 21-14, 15-21 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவிடமும் போராடி வீழ்ந்தனர்.

பிரணாய் 19-21, 13-21 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ராஜீவிடமும், இளம் வீரரான சிரில் வர்மா 16-21, 8-21 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியனிடமும் தோல்வி அடைந்னர்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரான்சிஸ் ஆல்வின், தருண் கோனா ஜோடி 17-21, 15-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் ஹென்ட்ரா சத்தியவான், மலேசியாவின் பூன் ஹியாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 20-22, 6-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் தகேஷி கமுரா, கெய்கோ சோனோடா ஜோடியிடம் வீழ்ந்தது. அதேவேளையில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 20-22, 21-19, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் லீ சுன் ஹே ரெஜினால்டு, லா சவுக் ஹிம் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 15-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் 21-10, 21-16 என்ற நேர் செட்டில் 4-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சுங் ஜி ஹைனை வீழ்த்தினார்.

5-ம் நிலை வீராங்கனையும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 17-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா சடோவை 21-17, 14-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை யான ருத்விகா ஷிவானி 17-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷென் ஜியாசினிடம் தோல்வியடைந்தார். மகளிர் இரட் டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கிரெட்டி ஜோடி 21-11, 21-13 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜெனிபர் டாம், வென்டி ஷென் ஜோடியை வீழ்த்தியது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds