[email protected]
feddral bank
BREAKING NEWS

தென்மாவட்ட கனிம தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை

பதிவு செய்த நாள்: 21 Jun 2017 2:54 pm

பொய் புகார்களின் அடிப்படையில் மூடப்பட்ட கனிம தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மாவட்ட கனிம தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தினர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனிம நிறுவனங்களை நம்பி ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவித்தனர். இந்த தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கனிம நிறுவன தொழிலாளர்கள், தங்களின் குழந்தைகளை படிக்க வைக்க இயலாமலும், வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் அவர்கள்
வேதனை தெரிவித்தனர்.

எனவே, பொய்புகார்களின் அடிப்படையில் மூடப்பட்டுள்ள கனிம நிறுவனங்கள் மீண்டும் தொழிலை தொடங்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் பாதிக்கப்பட்டுள்ள ஐம்பதாயிரம் பேரின் குடும்பத்தினருடன் தென்மாவட்ட தலைநகரங்களிலும், சென்னை கோட்டை முன்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை நாளை தமிழக ஆளுநர் அலுவலகத்தில் அளிக்க உள்ளதாகவும் தென்மாவட்ட கனிம தொழிலாளர் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds