feddral bank
BREAKING NEWS

அவமானப்படுத்தப்பட்ட அனில் கும்ப்ளே.. தலைசிறந்த வீரருக்கு தலைகர்வத்தால் கோஹ்லி தந்த பரிசு!

பதிவு செய்த நாள்: 21 Jun 2017 2:51 pm
By :

டெல்லி:

அனில்கும்ப்ளே மோசமான வகையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ‘விரட்டியடிக்கப்பட்டுள்ளார்’. இந்திய கிரிக்கெட் அணி கண்ட உலக தரம் வாய்ந்த ஒரு கிரிக்கெட் வீரர், உலகின் முன்னணி பவுலர்களில் ஒருவரான அனில் கும்ப்ளேவுக்கு இந்த நிலை வந்திருக்க கூடாது.

கோஹ்லி தனது வாழ்நாளின் ஒரு பெரும் தவறை இழைத்துவிட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக 1999ம் ஆண்டு பனி படர்ந்த பிப்ரவரியில், டெல்லியில் நடந்தது அந்த டெஸ்ட் போட்டி.

ஆனால் களத்திலோ அனல் பறந்தது. அன்வர், இஜாஸ் அகமது, இன்சமாம் உல்-ஹக், சலீம் மாலிக், மொயீன் கான் உள்ளிட்ட ஜாம்பவான்களை கொண்ட பாகிஸ்தான் அணிக்கு எதிராக அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே அழிக்க முடியாத கறையை பூசி, உலக சாதனை படைத்துக்கொண்டிருந்தபோது, அதே ஊரில் கோஹ்லி 10 வயது பாலகனாக லாலிபாப் சாப்பிட்டபடி, “ஐ.. இந்தியா ஜெயிச்சிடுச்சி..” என குதுகலித்துக்கொண்டிருந்தார்.

கொடூர தோல்வி:

இன்று, பெயர் தெரியாத வீரர்களை கொண்ட ஒரு பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரலாற்றில் இல்லாத கொடூரமாக ஒரு தோல்வியை பெற்றுத்தந்த இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் அதே கோஹ்லிதான். இதுதான் ரியாலிட்டி.

ஆணவமா?

எதிர்க்கட்சிகள் பலமாக இல்லாத இந்திய அரசியல் களத்தில் பாஜக மிகப்பெரும் பலம் வாய்ந்த கட்சியாக தெரிவதை போல காட்சியளிக்கிறார் கோஹ்லி. இன்று அவர்தான் உலகின் முன்னணி பேட்ஸ்மேன் என உருவகப்படுத்தப்படுகிறார். அல்லது, அவரே அப்படி நம்பிக்கொள்கிறார். சிறந்த கேப்டன் எனவும் அழைக்கப்படுகிறார்.

வேரில் வெந்நீர்:

இதுவெல்லாம் இந்திய அணிக்கு போதாது. கிரிக்கெட் என்பது 11 பேர் கொண்ட அணி மட்டுமல்ல, பயிற்சியாளர், சப்போர்ட்டிங் ஊழியர்கள் என அது ஒரு பெரும் கிளை. இதில் ஒன்றுக்கொன்று தொடர்பு அறுந்தால் மொத்த ஆலமரமும் சரிவதை போல அணி சரியும். வேரில் வெ்ந்நீர் ஊற்றும் வேலையைத்தான் கோஹ்லி செய்துள்ளார்.

செயலில் காட்டுவார்:

கும்ப்ளேயை பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும், அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் என்பது. அவர் என்றுமே கோபத்தையும், வெறியையும் மைதானத்தில் காட்டியது இல்லை. அவரது பந்து வீச்சுதான் அவரின் உள்ளத்தை பிரதிபலிக்கும். ஒரு காலகட்டத்தில், பந்துவீச்சு படு திராபையாக இருந்த இந்திய அணியில் இருந்த ஒரே விடிவெள்ளி கும்ப்ளே. அவர் வென்று கொடுத்த போட்டிகளின் எண்ணிக்கை கோஹ்லி வயதை விட அதிகம்.

வெற்றிமீது வெற்றி:

இந்திய அணியிலும் அதேபோன்ற ஒழுக்கத்தைதான் விரும்பினார் கும்ப்ளே. ராணுவ கட்டுப்பாடுதான் அணியை மேம்படுத்தும் என்பதை உணர்ந்திருந்தார். அவர் பதவியேற்ற ஓராண்டுகளில் ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்கவில்லை இந்தியா. பெரிய வெற்றிகளை வசப்படுத்தியது. பைனில் பாகிஸ்தானிடம் தோற்கும்வரை சாம்பியன்ஸ் டிராபியின் தாதாவாக வலம் வந்தது இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.

அவமானப்படுத்தப்பட்ட கும்ப்ளே:

ஆனால், சாம்பியன்ஸ் டிராபி பைனல் முடிந்ததும், கும்ப்ளே பக்கத்தில் கூட கோஹ்லி போகவில்லை. வேறு வீரர்களையும் போகவிடவில்லை. டிரெஸ்சிங் அறையில் தனித்துவிடப்பட்டார் கும்ப்ளே. இந்திய ஜாம்பவானுக்கு ஒரு இளம் வீரர் கொடுத்த மரியாதை இது. 2011ல் டோணி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றபோது, ஓய்வறைக்கு கும்ப்ளேவை அழைத்து கையில் உலக கோப்பை கொடுக்கப்பட்டது. நீங்கள் கட்டமைத்த, தண்ணீர் ஊற்றி வளர்த்த அணி இது. உங்களால்தான் வளர்ந்து இன்று உலக கோப்பையை வென்றோம் என்று சீனியருக்கு கொடுத்த மரியாதை அது. அந்த பரந்த மனதை பறிகொடுத்துவிட்டார் கோஹ்லி. ஆனால் கோஹ்லிக்கு ஒரு விஷயம் தெரியவில்லை. மற்றொரு கோஹ்லியோ அல்லது அவரைவிட திறமையானவரோ அணிக்குள் உருவானதும், அல்லது புதிதாக வந்ததும், கோஹ்லியை பிசிசிஐ கைகழுவும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*