[email protected]
feddral bank
BREAKING NEWS

திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா?

பதிவு செய்த நாள்: 20 Jun 2017 3:51 pm
By :

திருமணத்திற்கு பிறகு எனக்கு பிடித்த ஆடைகளை அணிவதில் பல பிரச்சனைகள்.எனக்கு இல்லை; என்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு.

என் சேலை முந்தானையின் வண்ணம்..

என் குட்டைபாவாடையின் நீளம்..

என் சுடிதாரின் கை அல்லது ஸ்லீவ் இல்லாத மாதிரி..

என் சட்டையின் பாக்கெட்..

நான் உடுத்தும் உடைகளை வைத்து என்னை ஏன் எடைபோடுகிறீர்கள்?
எனக்கு பிடித்தவற்றை அணிவது உங்கள் கண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? என அவர்களை கேட்கவேண்டும் போல இருக்கும்.. ஆனால் எப்போதும் போல மௌனம்தான் என் பதில்..

நான் பாலூட்டும் தாயாக இருப்பதால், வீட்டில் இருக்கும்போது எளிதாக களையும் சட்டையை நான் அணிவது என் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் தகிக்கும் சூட்டின் இடையே சமையல் வேலை இருக்கும், வீட்டிற்கு யாரவது வருவார்கள், அவர்களை கவனிக்கவேண்டும், என் அலுவலக வேலையை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை உறுத்திக்கொண்டிருக்கும் மனதின் ஆழத்தில் கத்திக்கொண்டே இருக்கும் ஒரு மனுஷியின் குரல், தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் …

வீட்டுதொலைபேசியின் சத்தத்திற்கு இடையில் என் கைக்குழந்தையின் கதறல் கேட்டவுடன் பால் கொடுக்க சட்டை-பாவாடைதான் எனக்கு வசதியாக உள்ளது.

இதை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை. சொன்னால் கேட்கவும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. காதுகளை இறுக்கமுடி அவர்களின் கட்டளைகளை ஏற்க மட்டுமே நான் பணிக்கப்பட்டுள்ளேன்..
இல்லாவிட்டால், நான் ஒரு அடங்காப்பிடாரி, வேலைக்கு போன பெண் என்பதால் அதிகம் பேசுகிறேன், வாயாடி என வசவுகளைக் கேட்கவேண்டியிருக்கும்..

பாலியல் வன்முறைக்கும் உடைகளுக்கும் என்ன தொடர்பு?

என் நெருங்கிய உறவினர்கள், மிகவும் பழக்கம் இல்லாத உறவினர்கள் என பலர் என் உடைகளை பற்றி கேள்வி கணைகளை தொடுக்கும்போது, எனக்கு ஆதரவாக இருப்பது என் கணவர் பிரவீன் ஜோசப் மட்டுமே..

ஒன்பது ஆண்டுகள்.. பல ஐடி நிறுவனங்களில் வேலை செய்த நான் திருமணத்திற்கு பிறகு, எனது குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டேன்..

திருமணத்திற்குப் பிறகு, என்னுடைய வேலை, என் குடும்பம் என பலவற்றில் இருந்து விலகி வந்துள்ளேன். என்னுடைய உடை தேர்வில் நான் மாற்றம் செய்துகொள்ளவேண்டும் என கட்டாயப்படுத்துவது நியாமா?

சில சமயம் நான் வீடு திரும்பியவுடன், ஸ்லீவ் இல்லாத உடை மேலே அணிந்திருக்கும் ஷ்ரக் சட்டையை கழற்றினால், என் உறவினர் மோசமாக விமர்சனம் செய்வார்கள்.

எல்லாவற்றையும் விட, அவ்வப்போது ஊடகங்களில் பாலியல் வன்முறை பற்றி செய்தி வந்தால், உடனே என்னிடம் தந்தை என்னிடம் காண்பிப்பார்… ”பார்.. நீ தவறாக உடை அணிந்தால், இது போல பிரச்சனை வரும்,” என்று அறிவுரை மழை ஆரம்பம் ஆகிவிடும்..

நிர்பயா, ஸ்வாதி கொலை தொடங்கி சென்னை சிறுமி ஹாசினி போன்றவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு காரணம் அவர்களின் உடை அல்ல..
கொலையாளிகளின் வன்மம்தான் காரணம்…

‘என் துப்பட்டாவிற்குள் ஒளிய பார்க்கும் சமூகம்”
திருமணத்திற்கு முன்பு நான் ஜீன்ஸ், சுடிதார், குர்தா போன்றவற்றை விரும்பி அணிவேன்.. அப்போது கூட என்னுடைய சில உறவினர் ” எப்போதும் துப்பட்டா அணிந்துகொள்” என்று கருத்து சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன்…

ஒரு குழந்தை பிறந்தது முதல், பெண் குழந்தைக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வெட்கம் என்பது ஊட்டிவளரக்கப்படுகிறது என்று எண்ணுகிறேன்..
உண்மையில் சமூகம்தான் படிப்படியாக திருந்தவேண்டும்…

என் துப்பட்டாவிற்குள் ஏன் சமூகத்தின் மோசமான கண்கள் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறன?
நான் சுதந்திரமாக எங்கும் சென்றுவர என் ஆடை எனக்கு துணையாக இருக்கவேண்டும்.. என்னை ஒருவர் கவனிப்பில் இருக்க உடை ஒரு தடையாக இருந்தால்?

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds