feddral bank
BREAKING NEWS

‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ அப்டேட்: 8 கெட்டப்களில் விஜய் சேதுபதி!!!

பதிவு செய்த நாள்: 20 Jun 2017 12:41 pm
By :

ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தில் 8 கெட்டப்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி

ஆறுமுககுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடர்ந்த காடுகளுக்கு முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு.

காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 கெட்டப்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுகள் வாழ்வ்து போலவும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஆறுமுக குமார்.

சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் விஜய் சேதுபதியின் ஒரேயொரு கெட்டப் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியுள்ளது. இதில் 20 வயது இளைஞராக தாடி – மீசை இல்லாமல் நடிக்கவுள்ளதால், தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தாடி – மீசையை எடுக்க திட்டமிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

தற்போது ப்ரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் ’96’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி..

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds