feddral bank
BREAKING NEWS

‘தானா சேர்ந்த கூட்டம்’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் ஒப்பந்தம்!!

பதிவு செய்த நாள்: 17 Jun 2017 11:00 am
By :

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் தொடங்கவுள்ள 10 நாட்கள் இறுதிகட்ட படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய கதாபாத்திரத்தின் பின்னணி ரசிகர்களைக் கவரும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ‘ஸ்பெஷல் 26’ படத்தின் கதையைப் பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds