feddral bank
BREAKING NEWS

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்!!!

பதிவு செய்த நாள்: 17 Jun 2017 10:03 am
By :

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை சுமார் 6 மணியளவில் மர்ம நபர்கள், பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து வீசினர்.

தாக்குதலில் சேதமடைந்த கார்!!

இதில் அங்கிருந்த கார் லேசாக சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கன்னியாகுமரி மேல்புறத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகத்திலிருந்த கட்சி நிர்வாகிகளின் நினைவு ஸ்தூபியும் உடைக்கப்பட்டது.

அந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது கோவையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கும் முன்னதாக டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சிக்கப்பட்டது. அண்மைக்காலமாக மார்க்சிஸ்ட் கட்சியை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்துள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*