[email protected]
feddral bank
BREAKING NEWS

ரூ.24 கோடி பழைய நோட்டுகளை மாற்ற தேவஸ்தானம் தவிப்பு!!

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 11:49 am
By :

புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் ஜனவரி 1-ம் தேதி முதல் முற்றிலுமாக புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்டது. இதனை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாத மக்கள் கோயில் உண்டியல்களில் செலுத்தத் தொடங்கினர். இந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயி லில் மட்டும் ரூ. 24 கோடி பழைய நோட்டுகள் காணிக்கை வந்தது.

இந்த நோட்டுகளை மாற்றித் தரும்படி ரிசர்வ் வங்கிக்கு திருப்பதி தேவஸ்தானம் பல முறை கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை. இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச் சகத்தின் இணைச் செயலாளரிடம் சமீபத்தில் பேசியுள்ளதாக தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds