news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

தந்தையர் தினத்தில் மகன் (பாகிஸ்தான்) உடன் இறுதிப் போட்டி: சேவாக் நகைச்சுவை ட்வீட்!!!

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 6:44 pm
By :

சாம்பியன்ஸ் டிராபியைத் தக்கவைக்கும் முனைப்புடன் ஆடிவரும் இந்திய அணி வங்கதேச அணியை நொறுக்கி இறுதியில் பாகிஸ்தானை சந்திப்பதையடுத்து முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்: “மிகவும் பெருமையாக உள்ளது, இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ரோஹித், தவண், கொலி சிறப்பான ஆட்டம். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்”

சேவாக்: அரையிறுதிக்குள் நுழைந்தது அபாரம். இவையெல்லாம் இப்போது வீடுதோறும் புழங்கும் விஷயமாகி விட்டது. தந்தையர் தினத்தில் மகன் (பாகிஸ்தான்) உடன் இறுதிப் போட்டி. இது வெறும் ஜோக்தான் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம், என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள புஜாரா கூறும்போது, “அற்புதமான வெற்றி, கோப்பைக்கு இன்னும் ஒரு வெற்றிதான், இந்திய அணி அபாரமாகச் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

ஜாகீர் கான், “பாதி ஆட்டத்தின் போது பவுலிங் நன்றாக இருந்தது, பவுலர்கள் இந்தத் தொடரில் மீண்டுமொருமுறை அருமையாக செயல்பட்டனர்” என்றார்.

விவிஎஸ். லஷ்மண் கூறும்போது, “இது வெற்றியல்ல, இது அறிவிப்பு, என்னமாதிரியான தொழில்நேர்த்தியான ஆட்டம்! வாழ்த்துக்கள், இறுதியில் வெல்வதற்கு குட் லக்” என்றார்.

கே.எல்.ராகுல், “இந்திய அணி ஆடும் கிரிக்கெட் ஆட்டம் மிகவும் மகிழ்வுக்குரியதாக உள்ளது, சாம்பியன்கள் போல் ஆடுகின்றனர், ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று காத்திருக்கிறோம்” என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds