[email protected]
feddral bank
BREAKING NEWS

உள்நாட்டிலேயே பிட்சுக்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ள முடியவில்லை: மோர்கன் புலம்பல்

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 12:08 pm
By :

சாம்பியனஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் கார்டிஃப் மைதானத்தில் பாகிஸ்தானிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிர்ச்சிகரமாக சவாலின்றி தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன், ‘உள்நாட்டு சாதகம்’ இல்லை என்று கூறியுள்ளார்.

கார்டிஃபில் விளையாடுவதற்கும் எட்ஜ்பாஸ்டனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எட்ஜ்பாஸ்டன் பிட்ச், சூழ்நிலையில் ஆடிவிட்டு கார்டிஃப் பிட்ச், சூழ்நிலைக்கு ‘அட்ஜெஸ்ட்’ செய்து கொள்ள முடியவில்லை என்கிறார் மோர்கன்.

ஆமீர் இல்லாமலேயே இங்கிலாந்து நேற்று 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் ஒருநேரத்தில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் அவுட் ஆனார், அதன் பிறகு இங்கிலாந்து வரிசை பொலபொலவென உதிர்ந்தது.

இந்தப் பிட்சை 3 நாட்களில் 2 வது முறையாக ஆடுகின்றனர். அதனால் பந்துகள் மெதுவாகவும், தாழ்வாகவும் வந்தது. இதனால் இங்கிலாந்து வீச்சாளார்களுக்கு இத்தகைய பிட்சில் வீசுவது கடினம், மாறாக துணைக்கண்ட பிட்ச் போல் இருந்ததால் பாகிஸ்தான் வீச்சாளர்களுக்கு பந்து சறுக்கிக் கொண்டு சென்றதோடு, கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங்கும் இருந்தது.

ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட், ‘பிட்ச் இரு அணிகளுக்குமே நன்றாகவே இருந்தது, நாங்கள் நன்றாக ஆடினோம் வெற்றி பெற்றோம்’ என்று கூறி மோர்கனை மறுக்கிறார்.

மோர்கன் கூறியதாவது:

உள்நாட்டு அனுகூலம் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தத் தொடரில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பிட்சில் ஆடுவோம் என்பது எங்களுக்கு தெரிந்தேயிருந்தது. இலங்கைக்கு எதிரான போட்டியைப் பார்த்த போது பிட்ச் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. எட்ஜ்பாஸ்டனிலிருந்து திடீரென இத்தகைய பிட்சுக்கு வந்து ஆடி அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகமான எதிர்பார்ப்பே. உணமையாகவே.

எனவே சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் கொஞ்சம் பின் தங்கி விட்டோம். இது மிகப்பெரிய வெறுப்பு, ஏனெனில் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் ஆடினோம். அத்தகைய பெரிய கிரிகெட்டுக்கு அருகில் கூட நாங்கள் இந்தப் போட்டியில் ஆடவில்லை. பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள், அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பாகிஸ்தான் இதே பிட்சில் நன்றாக பேட் செய்ததற்குக் காரணம், 2 நாட்கள் முன்னர்தான் இங்கு ஆடினர். பாகிஸ்தான் பவுலர்கள் நன்றாக வீசினர், இந்தப் பிட்சிற்கு அவர்கள் தங்களை நன்றாக தகவமைத்துக் கொண்டுள்ளனர். பிட்சில் பந்துகள் மந்தமாகவும் தாழ்வாகவும் வந்தது, ஒவ்வொரு பார்ட்னர்ஷிப்பும் குறைந்த ரன் விகிதத்திலேயேதான் தொடங்க வேண்டி வந்தது, சரி அடித்து ஆடலாம் என்றால் பிட்சின் தன்மை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

தோல்வியினால் கவலையில்லை அணி நல்ல திசையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது, உலகக்கோப்பைக்கு முன்னதான அடுத்த 2 ஆண்டுகளுக்கான முன்னோட்டங்கள் நல்லபடியாகவே சென்று கொண்டிருக்கின்றன.

இவ்வாறு கூறினார் மோர்கன்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds