[email protected]
feddral bank
BREAKING NEWS

இன்றைய படங்கள்… மரகத நாணயம், புலி முருகன், பீச்சாங்கை, தங்கரதம்!

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 3:24 pm
By :

இந்த வெள்ளிக்கிழமை 5 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அவை மரகத நாணயம், புலி முருகன், பீச்சாங்கை, தங்கரதம், உரு

மரகத நாணயம்:
ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் இந்தியாவில் 500-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது.

புலி முருகன்:
மலையாளத்தில் அதிரடி வெற்றிப் படமான புலிமுருகன் தமிழில் பிரமாண்டமாக வெளியாகிறது. மோகன் லால், நமிதா, கமலினி முகர்ஜி நடித்துள்ள இந்தப் படம் தமிழில் 300-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது. வைசாக் இயக்கியுள்ளார்

பீச்சாங்கை:
கார்த்திக், அஞ்சலி ராவ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பீச்சாங்கை படத்தை அசோக் இயக்கியுள்ளார். இடது கைப் பழக்கத்தை வைத்து காமெடியாக உருவாக்கப்பட்டுள்ள படம் இது

தங்கரதம்:
பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்க ரதம் படத்தில் சௌந்தர்ராஜா, வெற்றி, அதிதி கிருஷ்ணா நடித்துள்ள தங்கரதம் படத்தை என்டிசி மீடியா மற்றும் வீகேர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன

உரு:
கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள உரு படத்தை அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் இயக்கியிருக்கிறார். ஜோகன் இசையமைத்துள்ளார். வையம் மீடியா தயாரித்துள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds