feddral bank
BREAKING NEWS

நெடுவாசல் போராட்டத்தைத் தூண்டும் பயங்கரவாத இயக்கங்கள்! ஹெச்.ராஜா அதிர்ச்சித் தகவல்

பதிவு செய்த நாள்: 21 Apr 2017 2:44 pm

நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள் தூண்டிவிடுவதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயலும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், இந்த திட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனிடையே, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு அண்மையில் ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து, மீண்டும் போராட்டத்தில் குதித்தனர் நெடுவாசல் மக்கள்.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “;நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள் தூண்டிவிடுகிறது. மக்கள் ஏற்றால் மட்டுமே ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்தப்படும்”; என்று கூறினார்.

மேலும், சசிகலாவுக்கு துணையாக டி.டி.வி.தினகரனும் சிறைக்கு சென்றுவிடுவார் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"