feddral bank
BREAKING NEWS

டி.டி.வி.தினகரனின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி போலீஸ்!

பதிவு செய்த நாள்: 21 Apr 2017 2:44 pm

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ள டி.டி.வி.தினகரன், டெல்லி காவல்துறையினரிடம் ஆஜராகக் கேட்டிருந்த அவகாசத்தை நிராகரித்துள்ளது, டெல்லி போலீஸ்.

அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்ததால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, டிடிவிதினகரன் பணம் கொடுத்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி காவல்துறையினர் அண்மையில் கைதுசெய்தனர். இதையடுத்து, தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர்.

இதனிடையே, சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், டி.டி.வி.தினகரனுக்கு நேரில் சம்மன் வழங்கினர். அதில், வரும் 22-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக மூன்று நாள் அவகாசம் கேட்டிருந்தார் டி.டி.வி.தினகரன். இந்த அவகாசத்தை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நிராகரித்தனர். இதையடுத்து, நாளை டெல்லியில் தினகரன் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"