feddral bank
BREAKING NEWS

வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத்குமார், ராதிகா ஆஜர்

பதிவு செய்த நாள்: 12 Apr 2017 5:48 pm

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆஜர் ஆகியுள்ளனர். வருமானவரித்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து இவ்விருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்குச் சொந்தமான ரேடான் மீடியா நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போதே, சரத்குமாரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். இந்நிலையில், நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது வருமான வரித்துறை.

அதை ஏற்று இருவரும், 3 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ஒரே காரில் வந்தனர். பின்னர், விசாரணைக்காக உள்ளே சென்றனர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"