feddral bank
BREAKING NEWS

ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு சிக்கல்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

பதிவு செய்த நாள்: 12 Apr 2017 5:48 pm

திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன், போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன், பெண்களை கைகளால் தாக்கியதோடு, ஈஸ்வரி என்ற பெண் கன்னத்தில் அறைந்தார். இதில் அவர் நிலைகுலைந்தார். போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடூர தாக்குதல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே, திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க வழக்கறிஞர் பாலு, டிராபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், போராட்டக்காரர்கள் போலீஸ், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், சிறியளவில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். தடியடியின்போது பெண்ணுக்கு காயம் ஏற்படவில்லை. பெண்களை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் தாக்கியது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் சாமளாபுரத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சாமளாபுரத்தில் தடிதடியின்போது காயமடைந்தோர் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை தர வேண்டும். சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Like our official page to unlock the content
Or wait 60 seconds