[email protected]
feddral bank
BREAKING NEWS

பதவிக்கு வாராமலே அதிமுகவை காப்பாற்றுவேன்: சசிகலாவின் கணவர் நடராஜன்

பதிவு செய்த நாள்: 24 Feb 2017 12:51 pm
By :

”பதவிக்கு வாராமலே அதிமுகவை காப்பாற்றுவேன். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செயலற்ற தலைவராகிவிட்டார்” என்று சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று விமர்சனம் செய்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழாவை இன்று தமிழகம் முழுவதும் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். தஞ்சையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் சசிகலாவின் கணவர் நடராஜன் பேசுகையில், ”தமிழகத்தில் ஜெயலலிதாவின் புகழை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. நான் கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன். ஆனால், நான் அதிமுகவை காப்பாற்ற தொடர்ந்து உழைப்பேன். திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் செயலற்ற தலைவராகிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*