feddral bank
BREAKING NEWS

பஞ்சாப்,கோவா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது

பதிவு செய்த நாள்: 04 Feb 2017 10:11 am

கோவா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கும், பஞ்சாப்பில் காலை 8 மணிக்கும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.  இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கோவாவை பொறுத்தவரை மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், பா.ஜனதா – காங்கிரஸ்,  ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பனாஜியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார். கோவா மாநில முதல் மந்திரி லக்‌ஷ்மிகாந்த் பரசேகர் ஆர்ம்போல் தொகுதியில் வாக்குப்பதிவு செய்தார்.

பஞ்சாபை பொறுத்தவரை  மொத்தமுள்ள, 117 தொகுதிகளிலும் இன்று, ஒரே கட்டமாக ஓட்டுப் பதிவு நடக்கிறது. மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 1,145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.98 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*