feddral bank
BREAKING NEWS

செல்லாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் சிறை தண்டனை என்ற அவசர சட்டம் சட்டவிரோதமானது- சீதாராம் யெச்சூரி

பதிவு செய்த நாள்: 29 Dec 2016 11:01 am

ரூ.500, ரூ.1,000 செல்லாத நோட்டுகளை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு வைத்திருந்தால் சிறை தண்டனை என்ற அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மக்களுக்கு எதிரானது. இந்நிலையில் அந்த நோட்டுகளை குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வைத்திருந்தால் சிறை தண்டனை என்ற அவசர சட்டம் சட்டவிரோதமானது.

 50 நாட்களில் இந்த பிரச்சினை சீராகும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் மக்களுக்கு அவதி அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற பயந்து குறுக்கு வழியில் மத்திய அரசு தற்போது இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

டிசம்பர் 30-ந் தேதிக்கு பிறகு புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம். அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராட முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds