[email protected]
feddral bank
BREAKING NEWS

ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்-திருநாவுக்கரசர் மோதல் முற்றுகிறது

பதிவு செய்த நாள்: 20 Dec 2016 10:40 am
By :

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல சந்தேகங்கள் நிலவிவரும் நிலையில் அவரது மருத்துவ சிகிச்சை குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும் என கோரி வரும் நிலையில், அதற்கு எதிர்வினையாக அ.தி.மு.க.வினரை முந்திக்கொண்டு திருநாவுக்கரசர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, வெள்ளை அறிக்கையும் தேவை இல்லை. கறுப்பு அறிக்கையும் தேவை இல்லை. இந்த அறிக்கைகளால் மறைந்த ஜெயலலிதா உயிரோடு வந்துவிட போகிறாரா? என பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து எனது கருத்தை நான் பத்திரிகையாளர்களிடம் கூறியபோது, ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என கூறினேன்.

இதற்காக என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என திருநாவுக்கரசர் சாடியிருக்கிறார். அவர் மனநிலை பாதிக்கப்படாமல் திடமனதோடு இருப்பது சரியானால் ஏன் எல்லா இடங்களிலும் தான் அ.தி.மு.க.வில் இருந்திருந்தால் முதல்-அமைச்சராக இருந்திருப்பேன் என கூறி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்துகொண்டு அ.தி.மு.க.வில் தான் இருந்திருந்தால் முதல்-அமைச்சர் ஆகி இருப்பேன் என சிந்திப்பது தான் திடமான மனநிலையா?. வெள்ளை அறிக்கை வேண்டாம் என தான் சொன்னது சொந்த கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றும் சொல்லி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றால் அது குறித்து செயற்குழுவை கூட்டி முடிவெடுத்தாரா? அல்லது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுத்தாரா? அல்லது மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் கலந்து பேசி அறிவித்தாரா?. இது குறித்து அவர் தெளிவுபடுத்தினால் அவரது கருத்தை ஆதரிக்க தயாராக இருக்கிறேன்.

ஜெயலலிதாவோடு தான் பணியாற்றிய காரணத்தால் அவரது மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டாம் என்று சொன்னதாக கூறியிருக்கிறார். இதேபோல பிரதமர் மோடியோடு பா.ஜ.க.வில் சேர்ந்து பணியாற்றிய காரணத்தால் அவர் கொண்டு வந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டத்தால் வங்கிகளின் முன்னால் வரிசையில் நாட்கணக்கில் மக்கள் நின்று அவதியுறுவதை கண்டும் அத்திட்டத்தை ஆதரித்து இதுவும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று திருநாவுக்கரசர் கூறப்போகிறாரா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*