[email protected]
feddral bank
BREAKING NEWS

கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்

பதிவு செய்த நாள்: 20 Dec 2016 10:22 am
By :

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 15-ந் தேதி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக மீண்டும் காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுவாசிக்கும் வகையில் சுவாசக்குழாய் (‘டிரக்கியாஸ்டமி’) பொருத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தனர்.

தற்போது கருணாநிதி நல்ல குணமடைந்து வருகிறார். தனது அறையிலேயே டெலிவிஷன் பார்க்கிறார். பத்திரிகைகளை படிக்கிறார். கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அவர் வியாழக்கிழமை வீடு திரும்பலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்பேரில் நாளை மறுதினம் கருணாநிதி வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்த நிலையில் நேற்று காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்  கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரித்தார்.

இதேபோல் முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சேர்மன் பிரதாப் ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, திரைப்பட நடிகரும், பாடகருமான மாணிக்க விநாயகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தனர்.

பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறும்போது, “கருணாநிதி இந்த வயதிலும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்துகொண்டிருப்பவர். வெகுவிரைவில் அவர் வீட்டுக்கு திரும்புவார். கருணாநிதி விரைவில் குணம் அடையவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds