[email protected]
feddral bank
BREAKING NEWS

புயல் பாதிப்புக்குரிய நிவாரணத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும்-ஸ்டாலின்

பதிவு செய்த நாள்: 19 Dec 2016 4:05 pm

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் பிறந்த நாளையொட்டி, மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேட்டி அளித்த அவரிடம், கருணாநிதியை பார்க்க சென்றபோது, திட்டமிட்டே தன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாக வைகோ கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், வைகோவின் கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றார். அவர் மேலும் கூறும்போது, டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புயல் பாதிப்புக்குரிய நிவாரணத்தை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*