[email protected]
feddral bank
BREAKING NEWS

பண விநியோகிக்காத எஸ்.பி.ஐ வங்கியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

பதிவு செய்த நாள்: 16 Dec 2016 10:24 am

நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொணரவும் பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன் வாயிலாக புழக்கத்தில் இருந்த அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை (ரூ.500, ரூ.1000) செல்லாது என்று கடந்த 37 நாட்களுக்கு முன் அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து வங்கிகளில் இருந்து பணம் பெறவும், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கவும் உச்சவரம்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கிகளில் இருந்தும், ஏ.டி.எம்.களில் இருந்தும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் பண விநியோகிக்காத எஸ்.பி.ஐ வங்கியை வாடிக்கையாளர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மால்டா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

வாடிக்கையாளர்கள் கற்களை கொண்டு தாக்கியும், தடியை கொண்டு சரமாரியாக அடித்து நொறுக்கியும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*