news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

ஜனவரி மாதத்தில் இருந்து வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதற்கு உச்சவரம்பு எதுவும் இருக்காது-மத்திய அரசு

பதிவு செய்த நாள்: 16 Dec 2016 10:29 am

80 சதவீத புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த பிறகு, வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு கூறியது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு, வங்கியிலும், ஏ.டி.எம்.மிலும் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வங்கியில் வாரத்துக்கு ரூ.24 ஆயிரமும், ஏ.டி.எம்.மில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.2,500-ம் எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:-

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான கடந்த நவம்பர் 8-ந் தேதி நிலவரப்படி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் 86 சதவீத அளவுக்கு, அதாவது ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு புழக்கத்தில் இருந்தன.

அவற்றை வாபஸ் பெற்று விட்டு, புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதுவரை, 50 சதவீத அளவுக்கு, அதாவது ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதனால், வங்கிகளில் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிக கூட்டம் காணப்படுகிறது.

இன்னும் 30 சதவீத அளவுக்கு, அதாவது மொத்தம் 80 சதவீத அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த பிறகு, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படும். முதலில், கூட்டுறவு வங்கிகளிலும், பிறகு மற்ற அனைத்து வங்கிகளிலும் கட்டுப்பாடு தளர்த்தப்படும். நிலைமை சீரடைந்த பிறகு, கட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்படும்.

அதுபோல், ஜனவரி மாதத்தில் இருந்து, வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதற்கு உச்சவரம்பு எதுவும் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds