news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தை ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள்: 15 Dec 2016 4:51 pm

தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை வேல்ராஜ் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் தயாரானார்.

அதன்படி, இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாகவும், அப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய வி.கிரியேசன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. இப்படத்தின் பூஜை ஏற்கெனவே போடப்பட்டுள்ள நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்த படப்பிடிப்பை நடிகரும், தனுஷின் மாமானாருமான ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். மேலும், தனுஷுக்கு மாலை அணிவித்து அவருக்கு வாழ்த்துக்களையும் கூறினார். இந்த படப்பிடிப்பில் நடிகை அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சௌந்தர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds