[email protected]
feddral bank
BREAKING NEWS

ஜெயலலிதா இடத்தில் அமரத் தகுதியானவர் சசிகலா மட்டுமே-பொன்னையன் பேட்டி

பதிவு செய்த நாள்: 15 Dec 2016 5:23 pm
By :

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று காலை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், பச்சைமால், கோகுல இந்திரா, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க.வை வழிநடத்த சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்கவும், பொதுச்செயலாளராக வருவதற்கும் முழுமையான தகுதி படைத்தவர் சசிகலா.

ஜெயலலிதாவின் நிழலாகவும், அவர் உச்ச நிலைக்கு வருவதற்கு அச்சாணியாக திகழ்ந்தவர். அவருடன் தோளோடு தோளாக நின்று செயல்பட்டார்.

ஜெயலலிதாவின் மனசாட்சியாக இருந்தவர் சசிகலா. தன் குடும்பத்தை துறந்து விட்டு ஜெயலலிதாவுக்காக தியாக வாழ்வு வாழ்ந்தவர்.

எனவே அவர்தான் ஜெயலலிதா இடத்தில் அமரத் தகுதியானவர். அவர் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும். அதை நாங்கள் ஏகமனதாக வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒருமனதாக சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பார்கள்.

கேள்வி:- நடிகர் ஆனந்த ராஜ் பரபரப்பாக கருத்து தெரிவித்து உள்ளாரே?

பதில்:- அந்த கேள்வியெல்லாம் வேண்டாம்.

கே:- சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வலை தளங்களில் வருகிறதே?

ப:- அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. அபாண்டமானது. அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.

ஜெயலலிதாவுக்காகவே தியாக வாழ்வு வாழ்ந்தவர் சசிகலா. அ.தி.மு.க.வை வழி நடத்த தகுதியானவர். அவரே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவ்வாறு பொன்னையன் கூறினார்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் திருத்தணி கோ.ஹரி சுந்தரம், ஏழுமலை, அர்ச்சுனன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds