[email protected]
feddral bank
BREAKING NEWS

அவையை நடத்த விடாமல் ஆளுங்கட்சி இடையூறு- குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள்: 15 Dec 2016 4:18 pm

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருவதால் முக்கிய பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அவை முடக்கத்திற்கு மத்திய அரசின் பண ஒழிப்பு நடவடிக்கை தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பண ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன. எனவே, பிரச்சினை முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது பண ஒழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் அவல நிலை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்தார். அவரை பேசுவதற்கு துணை சபாநாயகர் அனுமதி அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

அப்போது, பேசிய குலாம் நபி ஆசாத், இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஆளுங்கட்சி அவையை நடத்த விடாமல் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டினார். ‘இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளின் அவலநிலை குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன்’ என்றும் குலாம் நபி கூறினார். அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து காங்கிரசுக்கு எதிராக கோஷமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*