news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

ரூ.3.25 கோடி ரூபாய் பழைய 500, 1000 நோட்டுகளாக டெல்லி ஓட்டலில் கைப்பற்றிய போலீசார்

பதிவு செய்த நாள்: 14 Dec 2016 12:05 pm

டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலின் அறையில் ஏராளமான பணத்துடன் சிலர் தங்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் துணையுடன் நேற்றிரவு அந்த ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நான்கைந்து பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 3.25 கோடி ரூபாயை கைப்பற்றினர்.

அந்த அறையில் தங்கியிருந்த அன்சாரி அபுசர், பஸல் கான், அன்சாரி அஃபான், லாடு ராம், மஹாவீர் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்களிடம் இருந்த பணம் மும்பையில் உள்ள பிரபல ஹவாலா தரகருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பணம் முழுவதும் பழைய 500, 1000 நோட்டுகளாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds