news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

ரூபாய் நோட்டு பிரச்சினை பற்றி விவாதம் நடத்த தயார்-வெங்கையா நாயுடு

பதிவு செய்த நாள்: 14 Dec 2016 10:34 am

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், 4 நாள் இடைவெளிக்கு பிறகு, இன்று மீண்டும் கூடுகிறது. இதில், ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக, பா.ஜனதா-எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ரூபாய் நோட்டு பிரச்சினை பற்றி சபாநாயகர் ஒப்புக்கொள்ளும் எந்த விதியின் கீழும் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். கூட்டத்தொடரின் மீதியுள்ள 3 நாட்களும் பிரதமர் பாராளுமன்றத்துக்கு வருவார்’ என்றார்.

இதையடுத்து, மீதியுள்ள 3 நாட்களும் இரு அவைகளிலும் தவறாமல் ஆஜராகுமாறு பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவருக்கும் அக்கட்சி மேலிடம் ‘கொறடா’ உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுபோல், காங்கிரஸ் கட்சியும் தனது எம்.பி.க்கள் இன்று தவறாமல் ஆஜராகுமாறு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று காலை, காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டமும் நடைபெறுகிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds