feddral bank
BREAKING NEWS

மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜிஜு மீதான ஊழல் குற்றச்சாட்டால் மக்களவை நாள் முழுவதும ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்: 14 Dec 2016 4:52 pm
By :

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பாயும் பிச்சோம் மற்றும் டெங்கா ஆற்றின் நீரை மையமாக வைத்து கடந்த 2005-ம் ஆண்டு காமெங் புனல் மின்சார நிலையம் திறக்கப்பட்டது.

இந்த புனல் மின்சார நிலையத்தை அமைக்கும் பணியில் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழலில் மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜிஜு மற்றும் அவரது உறவினர் கோபோய் ரிஜிஜு ஆகியோருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று பாராளுமன்றம் கூடியதும் கிரண் ரிஜிஜு மீதான ஊழல் குற்றச்சாட்டை மையமாக வைத்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும், இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். பண ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாகவும் பிரச்சனை எழுப்பினர். இதனால், தொடர்ந்து அமளி ஏற்பட்டதையடுத்து மக்களவை நாள் முழுவதும ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையிலும் ரிஜிஜு மீதான ஊழல் குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா எழுப்பினார். அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். அவர்களுக்கு எதிராக பா.ஜ.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds