feddral bank
BREAKING NEWS

பாலியல் புகார் எதிரொலி கர்நாடக மந்திரி ராஜினாமா

பதிவு செய்த நாள்: 14 Dec 2016 5:06 pm
By :

கர்நாடக மாநில அரசின் கலால்துறை மந்திரியாக பதவி வகிப்பவர், எச்.ஒய்.மேட்டி. சமீபத்தில் இவரைப்பற்றி பரபரப்பான தகவல் வெளியானது. இவர்மீது குற்றம்சாட்டி ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஒரு பெண், அரசு அலுவலகத்துக்குள் மந்திரி தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மந்திரி மேட்டி மறுத்திருந்தார். இந்நிலையில், அரசு அலுவலகத்தில் அவர் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாக தோன்றும் வீடியோ காட்சிகள் இன்று காலை ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின.

இந்நிலையில், தனது மந்திரி பதவியை அவர் இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி சித்தராமைய்யாவுக்கு அனுப்பிவிட்டதாக அவர் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds