[email protected]
feddral bank
BREAKING NEWS

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது

பதிவு செய்த நாள்: 14 Dec 2016 2:22 pm
By :

காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ராம்கர் அருகேயுள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் தென்படுவதை பாதுகாப்புபடை வீரர்கள் உணர்ந்தனர். இதையடுத்து, எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர்கள் அந்த பகுதியை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது எல்லை பகுதியில் உள்ள வேலியை தாண்டி பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்மநபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புபடை வீரர்கள் எச்சரித்ததை தொடர்ந்து அந்த நபர் அவர்களிடம் சரணடைந்தார். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் கைதான நபர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தை சேர்ந்த முகமது பக்‌ஷ் (வயது 65) என்பதும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*