[email protected]
feddral bank
BREAKING NEWS

வார்தா புயல் சென்னையில் பயங்கர சேதம் புயல் மற்றும் மழைக்கு 9 பேர் பலி

பதிவு செய்த நாள்: 13 Dec 2016 9:55 am

சென்னையில் வார்தா புயல் பாதிப்பு குறித்து வருவாய் நிர்வாக கமிஷனர் சத்தியகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வார்தா புயல் மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 296 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 97 மையங்களில் 8,008 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10,754 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படைகள் காஞ்சீபுரத்தில் 2, திருவள்ளூரில் 3, சென்னையில் ஒன்றுமாக பணியமர்த்தப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூரில் தலா 2 மாநில பேரிடர் மீட்புப்படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

இதுவரை புயல் மழைக்கு 9 பேர் இறந்துள்ளனர். சென்னை மூலக்கடையில் குளிர் தாங்காமல் ஒருவரும், ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவில் வீடு இடிந்து ஆண் ஒருவரும், சூளைமேட்டில் சுவர் இடிந்து ஒரு பெண்ணும், வடபழனியில் சுவர் இடிந்து ஒரு குழந்தையும், தண்ணீரில் மூழ்கி ஒருவரும் இறந்துள்ளனர்.

மீனம்பாக்கத்தில் விளம்பர போர்டு விழுந்து ஒருவரும், ராஜமங்கலம் கொளத்தூர் செல்வி நகரில் விளக்கு கம்பம் விழுந்து வைகுண்டநாதன் (வயது 42) என்பவரும், திருவள்ளூர் மாவட்டம் போரூரில் சுவர் இடிந்து என்ஜினீயர் ஆல்பர்ட் என்கிற ராஜசேகரன் (23), செங்கல்பட்டு மேல்மெய்யூரில் அஸ்வதி (8) என்ற சிறுமி சுவர் இடிந்தும் பலியாகி உள்ளனர்.

திருவள்ளூரில் 21 குடிசைகள், காஞ்சீபுரத்தில் ஒரு குடிசை, விழுப்புரத்தில் 2 குடிசைகள் உள்பட 47 குடிசைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 3,384 மரங்கள் விழுந்தன. அதில் 297 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 3,400 மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. 30 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன. 297 சாலைகள் அடைக்கப்பட்டன. நிலைமை சீரான பிறகு 89 சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.52 போக்குவரத்து சிக்னல் கம்பங்களும், 78 பஸ் நிறுத்த கூரைகளும் காற்றில் விழுந்தன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*