[email protected]
feddral bank
BREAKING NEWS

வார்தா புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது

பதிவு செய்த நாள்: 13 Dec 2016 10:27 am

‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது.

இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை ரத்து செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் மலேசியா உள்பட சில நாடுகளில் இருந்து வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமான போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

இதனிடையே புயலானது சென்னையை கடந்து திருவண்ணாமலை வழியாக தற்போது பெங்களூரை சென்று அடைந்துள்ளது. சென்னை நகரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், புயல் காற்று  மற்றும் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds