feddral bank
BREAKING NEWS

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தி.மு.க. தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்: 13 Dec 2016 12:57 pm
By :

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தை தாக்கிய வார்தா புயல் சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி 10-க்கும் மேற்பட்டோரை பலியாக்கி இருப்பதுடன், பெரும் துயரத்தையும் உருவாக்கி உள்ளது. புயல் தாக்கிய பகுதிகள் மொத்தமாக முடங்கியுள்ளது.

புயல் மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதுகாப்பு காரணங்களுக்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் நமது கழக தோழர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து தேவைப்படும் உதவிகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணிகளில் உதவுமாறும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

வார்தா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழ்நிலையில் மின்சாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகள் விரைந்து கிடைத்து மக்கள் இயல்பு நிலை திரும்ப அ.தி.மு.க. அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

புயலால் இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் தன்னால் இயன்ற உதவிகளை செய்து துணை நிற்கும் என்றும் உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*