[email protected]
feddral bank
BREAKING NEWS

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்-சோனியா காந்தி

பதிவு செய்த நாள்: 13 Dec 2016 10:31 am

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வார்தா புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்தேன். இயற்கையின் சீற்றத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த சில மாவட்ட மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருப்பது வேதனை அளிக்கிறது. அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

கடந்த ஆண்டு இயற்கையின் பேரழிவில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வந்ததை இந்த நாடே அறியும். அதேபோல் தற்போதும் அவர்கள் மீண்டு வருவார்கள். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என எதிர்பார்க்கிறேன். தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds