[email protected]
feddral bank
BREAKING NEWS

வர்தா புயலால் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை-தேசிய பேரழிவு மேலாண்மை குழுமம்

பதிவு செய்த நாள்: 13 Dec 2016 11:05 am

வங்க கடலில் மையம் கொண்டு இருந்த வார்தா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து சென்னை அருகே நேற்று மதியம் கரையை கடந்தது. அப்போது சென்னை நகரிலும், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பயங்கர காற்றுடன் கனமழை பெய்தது. புயலின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன.

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. சென்னையில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணு மின் நிலையம் அமைந்து இருக்கிறது. இங்குள்ள இரு அணு உலைகள் மூலம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக 500 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட அணுஉலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

புயல் கரையை கடந்த போது கல்பாக்கத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. புயல்-மழையினால் அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன.

இதுபற்றி தேசிய பேரழிவு மேலாண்மை குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார்தா புயலை சந்திக்கும் வகையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகவும், அணுமின் நிலையம் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் அணுமின் நிலைய அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds