[email protected]
feddral bank
BREAKING NEWS

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்-வானிலை மையம்

பதிவு செய்த நாள்: 13 Dec 2016 9:58 am
By :

புயல் கரையை கடந்தாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென் கிழக்கு வங்க கடலில் உருவான அதி தீவிர வார்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருந்தது. மையப்பகுதி பகல் 2.45 மணி முதல் மாலை 5 மணி வரை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது வலுவாகவே கடந்துள்ளது. கரையை கடந்த பின்னர் அது மேற்கு நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் நோக்கி சென்றது.

புயல் கரையை கடந்த பின் வலுவிழந்ததால் காற்றின் வேகம் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வரை இருந்தது.

புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். படிப்படியாக மழையின் அளவு குறையும்.

வார்தா புயலைப் போன்றே 1941-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை அதிதீவிர புயல் தாக்கி உள்ளது. அதற்கு பின்னர் 75 வருடங்களுக்கு பிறகு இப்போது புயல் தாக்கி உள்ளது.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*