[email protected]
feddral bank
BREAKING NEWS

மீலாது நபி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வாழ்த்து

பதிவு செய்த நாள்: 12 Dec 2016 10:13 am
By :

மீலாது நபி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்து செய்தியில், ‘‘நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மீலாது நபி எனும் மங்களகரமான நாளில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழக்கூடிய என்நாட்டு மக்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நபிகள் நாயகத்தை முன்னோடியாக கொண்டு கருணை மற்றும் சகிப்புத்தன்மையோடு உலக சகோதரத்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டு உள்ளார்.

ஹமீது அன்சாரி தனது வாழ்த்து செய்தியில், ‘‘மீலாது நபி எனும் இந்த சிறப்பான நாளில் நமது மக்களுக்கு சிறப்பான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். நபிகள் நாயகத்தின் சொல்லின்படி அமைதியான மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க பாடுபடுவோம்’’ என தெரிவித்து உள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*