[email protected]
feddral bank
BREAKING NEWS

நியூசிலாந்தில் நிதி மந்திரியாக இருந்த பில் இங்கிலீஷ் புதிய பிரதமராக பதவி ஏற்றார்

பதிவு செய்த நாள்: 12 Dec 2016 12:56 pm

நியூசிலாந்து பிரதமராக தேசிய கட்சி தலைவர் ஜான் கே கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது நியூசிலாந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் தலைநகர் வெலிங்டனில் உள்ள அரசு இல்லத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேசிய கட்சியின் கூட்டம் நேற்று நடந்தது. அதில் நிதி மந்திரியாக இருந்த பில் இங்கிலீஷ் (54) புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக அவர் பதவி ஏற்றார். துணை பிரதமராக மந்திரி பவுலா பென்னெட் அறிவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதவி விலகிய பிரதமர் ஜான் கே மற்றும் தேசிய கட்சி தலைவர் பீட்டர் குட் பெல்லேர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds