[email protected]
feddral bank
BREAKING NEWS

சென்னையில் கோரத்தாண்டமாடிய வார்தா புயல் 2 பேர் பலியானதாக தகவல்

பதிவு செய்த நாள்: 12 Dec 2016 4:25 pm

சென்னைக்கு கிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள வார்தா புயல் இன்று பிற்பகல் 1 மணிமுதல் மாலை 4 மணிக்கு இடையில் கரையை கடக்கும் நிலையில் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் அடிக்கும் பெருங்காற்று மற்றும் கனமழையால் சென்னை திக்குமுக்காடி வருகிறது.

தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் நிவாரணப்படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்களும், சிறுபடகுகளும் தயார் நிலையில் உள்ளன.

கப்பல்களில் அவசர உதவிக்கான மருத்துவ குழுவினரும், நீச்சல் படையை சேர்ந்த 30 குழுவினரும், சுமார் 500 பேருக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளுடன் மக்களுக்கு உதவி செய்வதற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வார்தா புயல் கரையை கடக்கும் இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை  வெளியில் செல்ல வேண்டாம் என சென்னை மக்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘இன்று பிற்பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணிக்கு மேல் மறு அறிவிப்பு வரும் வரையில் சென்னைவாழ் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். ஏற்கனவே, வெளியே சென்றவர்கள் அருகாமையில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*