[email protected]
feddral bank
BREAKING NEWS

வருகிற 20-ந்தேதி கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது

பதிவு செய்த நாள்: 10 Dec 2016 3:40 pm
By :

கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழு வருகிற 20-ந்தேதி கூடுகிறது.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*